மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் பக்தருக்கு இலவச லட்டு பிரசாதம் – தற்காலிகமாக நிறுத்தப்பட்ட திட்டம் மீண்டும் தொடக்கம்..!!!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த நவம்பர் 8ஆம் தேதி முதல் இலவசமாக லட்டு வழங்கும்  திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்….உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 5 மாதங்களாக கொரோனா ஊரடங்கால் தரிசனத்திற்கு தடை விதிக்கபட்ட நிலையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கட்டுள்ளது, இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டு பிரசாதம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில்,இன்று முதல் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது, சிறப்பு கட்டண தரிசனம் செய்யும் பக்தர்கள் தெற்கு கோபுரம் வழியாக பொது தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அம்மன் சன்னதி வழியாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!