விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், கஞ்சன்நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவர் து.பிரிதிவிராஜ் அவர்கள் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வாசகத்தை தனது மூல மந்திரமாக வைத்து நேர்மையாகவும், எளிமையாகவும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் இவர், ஏழை எளிய மக்களின் விண்ணப்பங்களை உடனுக்குடன் ஆய்வு செய்து கொரோனா தொற்று காலத்தில் அவர்கள் வீட்டிற்கே சென்று சான்றித வழங்கி வருகிறார். மேலும் மறைந்த தன்னுடைய தம்பியின் நினைவாக ராஜேஷ் உதவும் கரங்கள் அறக்கட்டளை மற்றும் அப்துல்கலாம் மனநிறைவு இல்லம் தொடங்கி கட்டணம் இல்லா மருத்துவ அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) மூலம் பல உயிர்களை காப்பாற்றி வருகிறார். ஒரு படுக்கை கொண்ட மருத்துவ அவசர ஊர்தியை நான்கு படுக்கைகளாக மாற்றி அந்த வாகனத்தில் அவசர சிகிச்சைகளுக்காக செல்பவர்களுக்கு அன்பு ஒன்றே கட்டணம் என்று வாகனத்தில் உள்ள வாதுகம் அவருடைய கருணை உள்ளத்தை அனைவருக்கும் புரிய வைக்கிறது. மேலும் ஏழைகளின் கல்விக்கு உதவுதல், அருப்புக்கோட்டை பகுதியில் ஆதரவற்ற சாலையோர மக்களுக்கு உணவளித்தல், மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக தனி வாகன சேவையையும் வழங்கி வருகிறார்.தனது அரசு பணியை வெறும் கடமையாக மற்றும் பாராமல் மனிதநேயத்தை நிலை நாட்டக்கூடியதொரு பேராயுதமாக பயன்படுத்தி வரும் இவரின் சமூக நலச் சேவைகளை பாராட்டி சோழன் உலக சாதனை புத்தகநிறுவனத்தினால் சமூக நல சேவைக்கான நற்சான்றிதழ் மற்றும் சோழன் சேவை செம்மல் விருதுதை அந்நிறுவனத்தின் தென் மண்டல பகுதி ஒன்றின் தலைவர் டாக்டர்.காளித்துரை வழங்கி கெளரவபடுத்தினர் . விருது பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பிரிதிவிராஜை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனத்தலைவர் டாக்டர்.நிமலன் நீலமேகம், பொதுதலைவர் டாக்டர் தங்கத்துரை மற்றும் இந்நிறுவனத்தின் பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.இந்ந விருதானது சோழன் உலக சாதனை நிறுவனத்தின் திருநெல்வேலி , தென்காசி, தூத்துக்குடி. கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டல பகுதி ஒன்றில் அரசு அதிகாரிகளில் முதல் முறையாக தென்காசி காவல் ஆய்வாளர் ஆடிவேலுவிற்கும் இரண்டாவதாக விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சன்நாயக்கன் பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிரிதிவிராஜ் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

You must be logged in to post a comment.