தமிழக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

தனியாருக்கு சாதகமாக திருத்தம் செய்த மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த ஊதியத்தையும் ஊதியத்தையும் திரும்பப்பெற, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் முடிவை கைவிடக் கோரியும் பல லட்சம் தொழிலாளர்கள் குடும்ப நலனை கருத்தில் கொண்டு ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அனைத்து பண பலன்களையும் உடனடியாக வழங்க கோரியும் தமிழகம் முழுவதும் தமிழக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.,

அதன் ஒரு பகுதியாக மதுரை எல்லீஸ் நகர் அருகே பொன்மேனி போக்குவரத்து கழக பணிமனை முன்பு தமிழக அரசின் அதிமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .,இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்பாபு தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் அல்போன்ஸ் ராஜா சிஐடியு பொதுச்செயலாளர் கனகராஜ் உட்படஎல்.பி.எப்., எச்எம்எஸ், சிஐடியூ, ஐஎன்டியூசி, எஸ்ஏஎப், எம்எல்எப்.உள்ளிட்டஅனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் போக்குவரத்து தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!