மதுரை மாநகர் அவனியாபுரம் காவல் உதவி ஆய்வாளர் . அதிகுந்தகண்ணன் வில்லாபுரம் மீனாட்சிநகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்த கருப்பையா மகன் ராமகிருஷ்ணன் என்பவர்,
திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியில் இருந்து கஞ்சா வாங்கிவந்து பதுக்கி வைத்திருப்பதாக அவருக்கு வந்த இரகசிய தகவலை பெற்று காவலர் .பெரியசாமி மற்றும் காவலர் .ராம்பிரசாத் ஆகியோர்களுடன் வில்லாபுரம் கழவுநீர்தொட்டி அருகில் சென்ற பொழுது அங்கு ஒரு நபர் மஞ்சள் கலர் பிளாஸ்டிக் சாக்குபையுடன் நடந்து சென்றுகொண்டிருந்த போது அவரை பிடித்து விசாரணை செய்ததில் தனது பெயர் ராமகிருஷ்ணன் வில்லாபுரம் மதுரை என தெரிவித்தார். அவரை வைத்திருந்த மஞ்சள் கலர் பிளாஸ்டிக் பையை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தபோது அதில் கஞ்சாகண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டதில் கஞ்சாவை திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியில் இருந்து பெயர் விலாசம் தெரியாத நபரிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி வந்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடமிருந்து 2 கிலோ உலர்ந்த கஞ்சா கைப்பற்றப்பட்டு அவரை நிலையம் அழைத்து வந்துஅவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

You must be logged in to post a comment.