கோவில் சிலைகளை திருடர்களிடம் இருந்து துரிதமாக மீட்ட காவல்துறையினர் – பாதுகாப்பு கருதி சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டுமெனவும் மதுரை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் பேட்டி

மதுரை மாநகர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் சிவபிரசாத் காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியது, மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை பகுதியில் உள்ள பேச்சி அம்மன் கோவிலில் கடந்த 17 ம் தேதி இரவு 10 மணியளவில் ஒரு மர்ம கும்பல் கோவில்பிள்ளையார் பொன்னர்சங்கர் ஐம்பொன் சிலைகள் மற்றும் சங்கு, யானை சிலைகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த திலகர் திடல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஏற்கனவே மதுரை மாநகர் பகுதியில் கோவில் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் பட்டியலில் இருந்த செல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் தான் திருடியாக ஒப்புக்கொண்டார், சிலைகளை அனுப்பானடி பகுதியில் இருக்கக்கூடிய முகமது முஸ்தபா, ஜெபஸ்டின் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து சிலைகளை மீட்டனர். அவர் மேலும் கூறுகையில் விநாயகர் சதுர்த்தி வரவுள்ள நிலையில் குரானா வைரஸ் தடுப்பு பணிக்காக சாலைகளில் வழக்கம்போல் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதை அரசு தடை விதித்துள்ளது இந்த நிலையில் இதுகுறித்து இன்று காலை இந்து அமைப்புகள் அவருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அதில் இந்து அமைப்பினர் காவல்துறைக்கு போதுமான ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறியுள் ளனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளையும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளையும் செய்தியாளர்களுக்கு காண்பித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!