மதுரையில் 1200 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் போலீசார் அதிரடி.

மதுரை மாநகர எஸ் எஸ் காலனி காவல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பிளவர் சீலா . தலைமையிலான. காவல் உதவி ஆய்வாளர் சரவண குமார் மற்றும் விஜயகுமார் உள்ளிட்ட காவல் துறையினர் எஸ் எஸ் காலனி, பாரதியார் நகர் பகுதியில், ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது என கண்காணித்து எஸ் எஸ் காலனி போலீசார் மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர் அப்பொழுது மூட்டை மூட்டையாக சுமார் 1200 கிலோ மதிப்புடைய தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது இரண்டு வாகனங்களும் கைப்பற்றப்பட்டது .இதனை தொடர்ந்து எஸ் எஸ் காலனி போலீசார் போலீசார் கார்த்தி வயது 35 செல்வராஜ் வயது 37 உட்பட 7 பேரை கைது செய்த போலீசார் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!