மதுரை தமுக்கத்தில் நடந்து வரும் கட்டுமானப் பணிகளை, வியாழக்கிழமை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.
ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மதுரை மாநகராட்சி சார்பில், மதுரை தமுக்கத்தை நவீனப்படுத்தும் விதமாக கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.இந்த தமுக்கம் மைதானத்தில் பல பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள் பேசிய பெருமையுண்டு.அத்துடன் ஆண்டுதோறும், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சித்திர பொருட்காட்சி, வர்த்தக சங்க கண்காட்சிகள், உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் தமுக்கம் அரங்கில் நடைபெறும்.இதனால், தற்போது சகல வசதிகளுடன் இந்த அரங்கமானது புணரமைக்கப்பட்டு வருகிறது.இந்த அரங்கத்தை, அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பார்வையிட்டார்.அப்போது, மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ். பாண்டியன், கூட்டுறவு சங்கத் தலைவர் வில்லாபுரம் ஜெ. ராஜா, பள்ளி நிர்வாகி கிரம்மர் சுரேஷ், கபாடிக் குழுத் தலைவர் சோலை எம். ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.