மதுரையில் வாடகை கார் ஓட்டுனர்கள் உரிமையாளர் நலசங்கம் சார்பாக தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் காலவரையற்ற முற்றுகை போராட்டம்….

மதுரை மாவட்டம் வாடகைக் கார் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று காலவரையற்ற முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் 350 வாகனங்களில் வந்த ஓட்டுனர்களும் மற்றும் உரிமையாளர்கள் மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இவர் கோரிக்கையானது 6 மாத காலத்திற்கு இன்சுரசை நீடிப்பு செய்ய வேண்டும், சாலை வரியும் ரத்து செய்யவேண்டும் கார்களுக்கு கட்டவேண்டிய தவணையை ஆறு மாத காலத்திற்கு தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அல்லது கால அவகாசம் கொடுக்க வேண்டுமெனவும் ஊரடங்கு நேரத்தில் பாதிக்கப்பட்ட ஓட்டுனர்களுக்கு நிவாரண தொகையாக ரூபாய் 5 ஆயிரம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் .

எங்களுக்கு ஒரு முடிவு தெரியாமல் இடத்தைவிட்டு நகர மாட்டோம் என ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணிப்பு கேமரா மூலமும் கண்காணித்து வருகிறார்கள் இதனால் பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!