மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மதுரை நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்க சிறப்பு செயற்குழு கூட்டம் செயலாளர் மோகன்
தலைமையில் நடைபெற்றது.இதில் துணை செயலாளர் சோமசுந்தரம் , செயற்குழு உறுப்பினர் தனசேகரன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.,இந்த சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் மதுரை மாநகரை இரண்டாவது தலைநகராக மாற்றினார் குரல் கொடுத்த மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாருக்கு நுகர்பொருள் வர்த்தக சங்கத்தின் சார்பாக நன்றியையும்,பொது ஊரடங்கு நேரத்தை குறைக்கவும் பொதுப் போக்குவரத்தை குறைந்த அளவு அமல்படுத்துதல் பணப்புழக்கத்தை அதிகரிக்க சிறு வணிக கடன் மகளிர் குழு போன்றவற்றிற்கு வங்கி மூலம் உடனடி கடன் வசதி செய்து தர,தொழில்துறையினர், வர்த்தக துறையினர் தினசரி சந்தித்து வரும் இன்னல்களை தீர்க்கவும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை தளர்த்த வேண்டும்,பெரும் வணிக நிறுவனங்களின் பொருட்களை மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போது நடைமுறையில் உள்ள ஈ பாஸ் முறைகளை தளர்த்த வேண்டும்.குரானா தொற்றுநோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரும்பாடுபட்ட மருத்துவர்கள் காவல்துறை தூய்மைப் பணியாளருக்கு நன்றியையும் தொடர்ந்து நோயை ஒழிக்கும் விதமாக கபசுரக் குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை பயன்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது

You must be logged in to post a comment.