திருவில்லிபுத்தூர் கோவில் உண்டியலை தூக்கிச்சென்ற இரண்டு பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் மிக அருகிலேயே தாலுகா காவல் நிலையம் , டிஎஸ்பி அலுவலகம், போலீசார் குடியிருப்பு ஆகிய பகுதிகளும் உள்ளன.வைரஸ் தொற்று காரணமாக கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், பெரிய மாரியம்மன் கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்காமல், தினமும் அர்ச்சகர்களால் பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது . இந்த நிலையில் பெரிய மாரியம்மன் கோவிலில் உண்டியல் ஒன்றை கொள்ளையர்கள் கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவில் தூக்கிச் சென்றுவிட்டனர். இது குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மாரியம்மன் கோவில் உண்டியலை 2 மர்ம ஆசாமிகள், முகமூடி அணிந்து திருடி தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் திருவில்லிப்புத்தூர் அருகேயுள்ள திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற குட்டி மற்றும் முனியப்பன் என்ற கபாலி ஆகியோர் கோவில் உண்டியலைத் தூக்கிச் சென்றதை போலீசார் கண்டிபிடித்தனர். கோவில் உண்டியலை திருடிச்சென்ற இருவரையும் நகர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் மிக அருகிலேயே தாலுகா காவல் நிலையம் , டிஎஸ்பி அலுவலகம், போலீசார் குடியிருப்பு ஆகிய பகுதிகளும் உள்ளன.வைரஸ் தொற்று காரணமாக கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், பெரிய மாரியம்மன் கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்காமல், தினமும் அர்ச்சகர்களால் பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது . இந்த நிலையில் பெரிய மாரியம்மன் கோவிலில் உண்டியல் ஒன்றை கொள்ளையர்கள் கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவில் தூக்கிச் சென்றுவிட்டனர். இது குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மாரியம்மன் கோவில் உண்டியலை 2 மர்ம ஆசாமிகள், முகமூடி அணிந்து திருடி தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் திருவில்லிப்புத்தூர் அருகேயுள்ள திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற குட்டி மற்றும் முனியப்பன் என்ற கபாலி ஆகியோர் கோவில் உண்டியலைத் தூக்கிச் சென்றதை போலீசார் கண்டிபிடித்தனர். கோவில் உண்டியலை திருடிச்சென்ற இருவரையும் நகர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!