m
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியான பைபாஸ் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் கிருதுமால் நதி ஓடுகிறது. இந்த கிருதுமால் நதி தற்போது மிகுந்த துர்நாற்றத்துடன் அப்பகுதியில் சாலையை கடக்கும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்படும் அளவிற்கு இருக்கிறது. இந்த நிலையில் தினசரி மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் வாகனமானது அதில் கழிவுநீரை கொட்டுகிறது. பலமுறை அப்பகுதியை சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் இதுகுறித்து தொலைபேசி வாயிலாக தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இனிமேல் இதுபோன்று நடக்காது எனவும் நான்கு ஐந்து முறைக்கு மேல் என்னிடம் சொல்லி விட்டார்கள் என்று மீண்டும் இதே போன்ற நிலை பார்த்ததும் உடனடியாக நடந்தவற்றை அனைத்தையும் ஆதாரமாக இருக்க வீடியோ பதிவு புகைப்படமும் எடுத்து விட்டேன். தினமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்லக்கூடிய பிரதான சாலையில் இதுபோன்ற கழிவு நீரை வாய்க்கால் கொடுக்கிறீர்கள் கழிவுநீர் நீரேற்று நிலையத்தில் கொண்டு செல்ல வேண்டும் என கேட்டேன் என்று கேட்டதற்கு எங்கள் அதிகாரிகள்தான் கொட்ட சொல்லியுள்ளார்கள் இதனால் உங்களுக்கு என்ன ஆகப் போகிறது என என்னையே திருப்பிக் கேட்டார்கள் நீங்கள் கொடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லிவிட்டு மாநகராட்சி ஆணையாளர் தொலைபேசி வாயிலாக நடந்தவற்றை தெரிவித்தேன் பின் அங்கிருந்து ஒரு அதிகாரி வைத்து விட்டு விடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் நான் பலமுறை சொல்லிவிட்டேன் நீங்கள் கேட்கவில்லை. ஆனால் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் தானே மாநகராட்சி ஆணையாளர் கவனத்திற்கும் கொண்டு சொன்னதற்கு உடனடியாக அந்த ஓட்டுனர் இங்கே என்ன சந்தனம் ஆகிறது என கேட்டார் நான் கொட்டி அதில் என்ன தவறு உள்ளது எனவும் என மாநகராட்சி ஆணையாளர் திட்டும் அளவிற்கு பேசியுள்ளார் மேலும் அந்த பகுதி வார்டு அதிகாரி அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளுங்கள் இந்த ஒரு முறை எனவும் நாங்கள் உங்களுக்கு பல செய்கிறோம். எனவும் சொன்னார் எதற்கு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும், என்ற அர்த்தமே இல்லாமல் இருக்கிறது. மதுரை மாநகராட்சி. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தி கொண்டிருக்கும் ஒரு பகுதியில் மற்றொரு பகுதியில் இதுபோன்ற அசுத்தம் செய்யும் அதிகாரிகள் மீது. மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாநகராட்சி ஆணையாளர் உரிய நடவடிக்கை சமூக ஆர்வலர்களும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.