நிலத்தின் உரிமையாளர்களை தாக்கி -நிலத்தை அபகரிக்க முயல்வதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சேர்ந்தவர் பாலமுருகன் இவர் மனைவிக்கு உசிலம்பட்டி ஒன்றியம் பாப்பம்பட்டியில் காலி நிலம் ஒன்று இருக்கிறது,அந்த நிலத்திற்கு தென்புறம் உள்ள வீட்டின் இடம் முத்துமாயாகான் என்பவருக்கு சொந்தமானது,முத்துமாயக்கான் மகள்கள் மற்றும் அவரது கணவர்கள் நான்கு நபர்களும் சேர்ந்து பாலமுருகனின் மனைவியை அடித்து துன்புறுத்தி அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு உண்டான அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர்,நிலத்தை தரவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்,இதனால் தங்களுக்கு நீதி கோரி பாலமுருகன் குடும்பத்தினருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார்.பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த காவல்துறையினர் பாலமுருகனுக்கு சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உத்தரவாதம் கூறி அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்க முயற்சித்தனர்,இருந்தபோதிலும் அவர்கள் நீதி கிடைக்காமல் வீட்டுக்கு செல்ல முன்வராததால் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் தஞ்சம் அடைந்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!