தேனூரில்அமமுக கட்சி பணிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது

சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் அமமுக மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக மதுரை மேற்கு ஒன்றிய தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது இக்கூட்டத்திற்கு மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார் கழகப் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் டேவிட் அண்ணாதுரை முன்னிலை வகித்தார் தலைமை நிலையச் செயலாளர் மற்றும் தென் மண்டல பொறுப்பாளர் உமா தேவன் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார் பின்னர் நிர்வாகிகள் கட்சி வளர்ச்சிக்காக செய்யக்கூடிய பணி குறித்து பேசினார் மதுரை மேற்கு ஒன்றியம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் செல்வகுமார் வரவேற்றார் வடக்கு ஒன்றிய செயலாளர் பாரத ராமச்சந்திரன் நன்றி கூறினார் இதில் இருபத்தொன்பது ஊராட்சி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

.செய்தியாளர் வி காளமேகம். மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!