திருமங்கலத்தில் தீப்பற்றி எரிந்த நிலையில் மூதாட்டியின் உடல் மீட்பு. கொலையா என போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் திருமங்கலம் குண்டாறு பகுதியில் நேற்று மதியம் துர்நாற்றத்துடன் கலந்த புகைமூட்டம்.சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள்  அந்த இடத்தைப் பார்த்தபோது அங்கு மனித உடல் ஒன்று தீ வைத்து எரிந்துகொண்டிருந்த நடுவில் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியுற்ற அப்பகுதி மக்கள் திருமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த டிஎஸ்பி வினிதா தலைமையிலான போலீசார் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்து உடலை மீட்டு கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்ததில் இறந்தவர் 60 வயது மதிக்கத்தக்க பெண் என்பது தெரியவந்தது அடுத்து போலீசார் மூதாட்டியை கொண்டுவந்து எரித்தது யார்? கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா?என்ற கோணத்தில் அப்பகுதியிலுள்ள குடியிருப்புவாசிகள் இடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துவருகின்றனர். குடியிருப்புக்கு அருகிலேயே பெண் உடலை தீ வைத்து எரித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!