அந்தணர் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ராஜாளி ஸ்ரீ சீ. ஜெயபிரகாஷ் ஐயர் தலைமையில் இந்த இயக்கம் பிராமண சமூக நலனுக்காக நான்கு ஆண்டுகளாக இயங்கி வருகிறது.அதன்படி கோயம்புத்தூரில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் மற்றும் உறுப்பினர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.
மத்திய அரசின் 100 Ayush Stores மருத்துவ விற்பனை நிலையங்கள், பிராமண சமூக மக்களின் பொருளாதாரம் மேம்பட மற்றும் பாதுகாப்பு உள்ள மருத்துவத்தின் பயன்பாடு படி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு ஏற்கனவே பிரதம மந்திரியின் மருந்தக திட்டத்தில் தமிழ்நாட்டில் 475 கடைகளை திறக்கப்பட்டு சிறப்பான வெற்றியை தந்தவருமான,நமது இனமான ஸ்ரீ விஜயகுமார் சிறப்பு நிலைக்குழு(Task Force) தலைவர் பங்கேற்புடன்.மற்றும் இத்திட்டத்தை செயல்படுத்த வங்கிகடன் பெறுவது எப்படி ? என்பதை PRAGATI நிறுவனத்தோடு இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளோம்.
மத்திய அரசின் முற்பட்ட சமுதாய மக்களுக்காக 10% இடஒதுக்கீடு திட்டத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் இங்கு நடைமுறைப்படுத்தி ஏறத்தாழ 79 சாதியினர்கள், இப்பட்டியலில் உள்ளவர்களுக்காகவும் ,அவர்கள் வாழ்வு மேம்படவும் விரைவில் ஆணையிட பணிவுடன் கேட்டு கொள்கிறோம்.
எங்கள் இயக்கம்,மாண்புமிகு புரட்சிதலைவி அம்மாவிடம் ஏற்கனவே அந்தணர் நலவாரியம் அமைக்க கோரினோம்.அதன்படி தற்போது தமிழகத்தை சிறப்பாக நடத்திவரும் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி ஸ்ரீ பழனிச்சாமி அவர்கள் பிராமண சமூக மக்களின் நலனுக்காகவும் அவர்களின் வாழ்வில் விடிவெள்ளியாக அமைய அந்தணர் நலவாரியம் அமைத்திட பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
திரைப்படங்களில் பிராமண சமுதாயத்தை அவமதித்து கேலி,கிண்டல் செய்வது பெருகி வருகிறது.இதற்கு நிரந்தர தீர்வளிக்க மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி ஸ்ரீ பழனிச்சாமி அவர்கள்,திரைப்பட தணிக்கை குழு வரையறையில் இதுபோன்ற சாதி,மத அவமதிப்புகளை உண்டாக்கி வன்முறை தூண்டும் செயல்களை தடுக்க அந்தணர் சமுதாய பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களை உறுப்பினர்களாககொண்டு தமிழக அரசு தணிக்குழு அமைத்து தீர்வளிக்க வேண்டுகிறோம்.
பிராமண சமூக மக்களின் திருமண பிரச்சினை,கல்வி உதவி, வேலைவாய்ப்பு,தொழில் மேம்பட ஏற்கனவே குழு செயல்படுகிறது ,அதில் மேலும் புதிய நிர்வாகிகளை நியமித்து ,புதிய திட்டங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன..அந்தணர் முன்னேற்ற கழகத்தின்கோரிக்கையை தீர்மானத்தை தமிழக முதல்வரிடம் நேரில் அளிப்பது மத்திய அரசின் பிரதிநிதிகளிடம் நேரில்வழங்கவும் முடிவுசெய்யபட்டது..
ராஜாளி சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர்.மாங்காடு பாலாஜி ஆத்ரேயாபொதுசெயலாளர்.கோவை மணிகண்ட சிவாச்சாரியார் பொருளாளர்.சென்னை உமாமகேஷ்வரி கனேசன் சாஸ்த்திரிகள் மகளிரணி செயலாளர் ஆகியோா் கலந்து கொண்டனா்.
..செய்தி வி காளமேகம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









