காவல்துறை சாா்பில் உதவி

திருநகர் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்துவரும் நாகேந்திரன் என்பவர் பக்கவாதம் ஏற்பட்டு கடந்த 11 மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்தவருக்கு நெஞ்சுவலியும் ஏற்பட்டு தற்போது மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இருதய அறுவைசிகிச்சை செய்து தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டுவந்தார். கடந்த 11 மாதம் தொடர் சிகிச்சை முடித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் பணிக்கு அறிக்கை செய்தவருக்கு மறுபடியும் உடல்நிலை சரியில்லாமல் வேலம்மாள் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு மூளையில் இரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதனை அறுவை சிகிச்சை மூலமாக சரி செய்யப்பட்டது.அவருக்கு மருத்துவ காப்பீட்டு தொகை போக அதிகமாக மருத்துவ செலவு செய்து தொடர் சிகிச்சைக்கு அவரது குடும்பம் மிகுந்த சிரமத்தில் இருந்து வந்தது அதனை கேள்விப்பட்டு துயர்போக்க மதுரை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் அனைவரும் இணைந்து ரூ.2,25,500/- யை சிறப்பு சார்பு ஆய்வாளர் N.நாகேந்திரன் மனைவி. கோமதியிடம் மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா  காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து வழங்கி அவரது குடும்பத்தினருக்கு விரைவில் அவர் பூரண குணமடைந்து வீட்டிற்கு வருவார் என்றும் ஆறுதல் வார்த்தை கூறினார்.

செய்தியாளர் ,வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!