உலகப்புகழ்பெற்ற மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் ஆடி பிரமோற்சவ ஏழாம் நாள் திருவிழா முன்னிட்டு பெருமானுக்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு அலங்காரம் விசேஷ பூஜைகள் செய்தனர்

மதுரை மாவட்டம் மேலூர்அருகே உலகப்புகழ்பெற்ற அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா நடைபெறும். சித்திரை திருவிழாவிற்கு அடுத்தபடியாக விமர்சையாக ஆடி திருவிழாவனது ஆலயத்தில் நடைபெறும் நிலையில் இந்தாண்டு கொரோனா காரணமாக பொதுமக்கள் மற்றும் முறைதாரர்கள் இன்றி ஆடி பிரமோற்ச திருவிழா , சன்னதி முன்பாக உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் 26. ந் தேதி துவங்கியது.திருக்கோவில் பட்டாச்சாரியர்கள் மற்றும் பரிசாரர்களால் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

26 ந் தேதி முதல் 10 நாட்கள் நடைபெறும் இந்த ஆடி திருவிழாவில் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்க பல்லக்கு மற்றும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோயிலின் உட்பிரகாரத்தில் வலம்வந்து காட்சி தந்து வருகின்றார். இந்நிலையில் இன்று அருள்மிகு சுந்தரராஜ பெருமாளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. அழகர் கோயில் உள்பிரகாரத்தில் ஏழாம் நாள் திரு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது அப்பொழுது சுவாமிக்கு பட்டாச்சாரியார்கள் . அம்பி பட்டர் மூலம் சிறப்பு அலங்காரம் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் கோயில் துணை ஆணையர் அனிதா உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் கலந்துகொண்டனர். கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி இந்நிகழ்ச்சி இன்று நடைபெற்றது குறிப்பிடதக்கது. ஆகும். ஏழாம் நாள் திருவிழா மாலையில் சுவாமி புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு விஷேச அலங்காரங்கள் / பூஜைகள் / ஆராதனைகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத் தக்கது ஆகும்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!