கோவிட்-19 வார்டுக்கு புதிய டிஜிட்டல் மொபைல் எக்ஸ்ரே கருவி.மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கியுள்ளார்..

தற்பொழுது மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனை கோவிட்-19 வார்டுக்கு மதுரை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்ச ருபாய் மதிப்பில் COMPUTER RADIOGRAPHY கருவியுடன் MOBILE X-RAY கருவிகளை மதுரை அரசு இராசாசி மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர்.ஆர்.ரவீந்திரன் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.சி.தர்மராஜ்  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கினார்,

உடன் சிபிஎம் மாவட்ட செயலாளர்கள், இரா.விஜயராஜன் மற்றும் சி.ராமகிருஷ்ணன்.நவீன தொழில்நுட்ப கருவியான இந்த டிஜிட்டல் எக்ஸ்ரே. மொபைல் எக்ஸ்ரே கருவியில் எடுத்த எக்ஸ்ரே படங்களை டிஜிட்டல் எக்ஸ்ரே படமாக மாற்றக்கூடியது.இதன்மூலம் கொரோனா சிகிச்சை பிரிவு நோயாளிகள் அந்தந்த பிரிவுகளில் வைத்தே டிஜிட்டல் எக்ஸ்ரே படம் எடுக்க முடியும். இதன்மூலம் நோயாளிகள் சிரமமின்றி சிகிச்சைபெற பேருதவியாக இருக்கும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!