தவணைத் தொகை கேட்டு மிரட்டும் பைனான்ஸ் நிறுவனத்தினர் கலெக்டரிடம் மனு

மகளிர் குழுக்கள் சார்பில் கடன் பெற்றவர்களிடம் கடனை கட்ட கோரி அடியாட்களை வைத்து மிரட்டுவதாக புதூரை சேர்ந்த மகளிர் குழுவினர் சித்ரா தலைமையில் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.அவர்களது புகார் மனுவில் கூறியிருப்பதாவது: புதூரில் குடிசைத் தொழில் மற்றும் சிறு தொழில் செய்யும் பெண்கள் மகளிர் குழுக்களில் இணைந்து கடன் பெற்றனர். தற்போது ஊரடங்கு காரணத்தால் கடந்த 4 மாதங்களாக வரு இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் மகளிர் குழுக்களில் பெற்ற கடன் தொகையை செலுத்த இயலவில்லை. ஆனால் மகளிர் குழுக்கள் மூலம் கடன் கொடுத்த நிறுவனத்தினர் அடியாட்களுடன் வந்து வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு பணம் கேட்டு மிரட்டுகின்றனர். மேலும் தவணைத் தொகை கட்டவில்லை என்றால் கூடுதல் வட்டி சேர்த்து பணம் கட்ட வேண்டும் என மிரட்டுகின்றனர். எனவே பிரச்சனைகள் தீரும் வரை தனியார் நிறுவனங்கள் பணம் கேட்டு தொல்லை செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!