ராஜபாளையம் முன்னாள் பெண் சேர்மன் வைரஸ் தொற்றால் பலி….

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சியின் முன்னாள் பெண் சேர்மன் தனலட்சுமி, வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.கடந்த 2011 முதல் 2016 வரை ராஜபாளையம் நகராட்சி சேர்மனாக பதவி வகித்தவர் தனலட்சுமி. இவர் அதிமுக கட்சியை சேர்ந்தவர். இவரது கணவர் செல்வசுப்பிரமணியராஜா முன்னாள் விருதுநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பதவியில் இருந்தார். முன்னாள் சேர்மன் தனலட்சுமி வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனலிக்காமல் பரிதாபமாக இறந்தார். அரசு வழிகாட்டுதல் படி அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல், அரசு சார்பாக அவரது உடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இன்று காலை டாக்டர் ஒருவர் தொற்றால் இறந்த நிலையில், முன்னாள் பெண் சேர்மனும் வைரஸ் தொற்றால் இறந்த செய்தி, ராஜபாளையம் பகுதியில் பலத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்a

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!