மதுரை மாவட்டம் கருங்காலக்குடியில் உள்ள கால்நடை மருந்தகத்தின் மேல் கூரை கான்கிரீட் கட்டிடம் இடிந்து விழுந்தது. அது சமயம் யாரும் பணியில் இல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.இன்று காலை வழக்கம் போல கால்நடை உதவி மருத்துவர் மற்றும் உதவியாளர் பணிக்கு வந்த போது கட்டிடம் இடிந்து விழுந்ததை பார்த்துள்ளனர்.
இதுகுறித்து மாடுகளை சிகிச்சைக்கு அழைத்து வந்த விவசாயிகள் கூறுகையில் பல ஆண்டுகளாகவே இந்த கட்டிடம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. அதிகாரிகளிடமும், ஊராட்சி அலுவலகத்திலும் பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. நல்ல வேளை யாரும் அருகே இல்லாத காரணத்தால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இனிமேலாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.