மதுரை மாவட்டம் , அழகர்கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடி பிரமோற்சவத்திருவிழா முக்கியமான திருவிழாவாகும் . பசலி 1430 ம் ஆண்டு 25.07.2020 முதல் 04.08.2020 வரை நடைபெறும் இத்திருவிழாவில் 25.07.2020 அன்று மாலை 6.40 மணிக்கு வழக்கம் போல் அங்குரார்பணம் தொடர்பான அனைத்து பூஜைகளும் நடைபெற்று 26.07.2020 அன்று காலை 8.01 மணி முதல் 9.00 மணிக்குள் திருக்கோயிலின் சன்னதி முன் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி திருக்கோயில் பட்டாச்சாரியார்கள் மற்றும் பரிசாரகர்களால் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது .
மாலை 10 நாட்கள் நடைபெறும் ஆடிபிரமோற்சவ திருவிழாவின் முதல் நாளான இன்று ( 26.07.2020 ) அருள்மிகு சுந்தரராசப்பெருமாள் ( எ ) கள்ளழகர் அன்னவாகனத்தில் எழுந்தருளி சன்னதியின் உட்பிரகாரத்தில் காட்சி தருவார் . 27.07.2020 முதல் 04.08.2020 வரை காலை , மாலை இருவேளைகளில் பல்லக்கு , வாகனங்களில் சன்னதியின் உட்பிரகாரத்தில் நடைபெறும் இதில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் கோவில் இணை ஆணையர் அனிதா தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்











You must be logged in to post a comment.