மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் ஊராட்சி மன்ற நிர்வாகமும், சடையாண்டி சித்த வைத்திய சாலையும்
இணைந்து, ஹோமியோபதி மருத்துவ முகாமை, நடத்தின.இம் முகாமுக்கு, முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் கேபிள் ராஜா முன்னிலை வகித்தார்.முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் சித்த மருத்துவருமான சடையாண்டி, முகாமை தொடங்கி, மருந்து மற்றும் கபசுரகுடிநீரை சுமார் 1800 பேருக்கு வழங்கி, மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினார்.ஊராட்சி உறுப்பினர் முள்ளை சக்தி, ஊராட்சி செயலர் மனோஜ் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.