நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் முயற்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.இந்த கொரோனா தொற்றில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முதல்நிலை பணியாளர்களை பாதுகாக்க பி.பி.இ உடையை அணிந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் மதுரை கூத்தியார்குண்டு நான்கு வழிச்சாலையில் சாலையோரம் உள்ள குப்பை மேட்டில் உபயோகப்படுத்தப்பட்ட பி.பி.இ உடைகள் வீசப்பட்டுள்ளது.உபயோகப்படுத்தப்பட்ட பிபிஇ உடைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் ரோட்டோரங்களில் வீசப்பட்டு இருக்கின்றது.இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.இதனால் உடனடியாக மதுரை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர் முறையான பாதுகாப்புடன் உபயோகப்படுத்தப்பட்ட வீசப்பட்ட பிபிஇ உடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.