சாத்தையாறு அணை தூர்வாரப்பட்டு, பெரியாறு பிரதான கால்வாயிலிருந்து தண்ணீர் கொண்டு நிரபப்படும்: பாஜக விவசாயி அணி மத்திய மாநில அரசிடம் வற்புறுத்த திட்டம்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் பாலமேடு அருகே சாத்தையாறு அணையை தூர்வாரி, பெரியாறு பிரதான கால்வாயிலிருந்து தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும் என, பாஜக மாநில விவசாய அணியினர் , சனிக்கிழமை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.அவர்கள் மேலும் கூறியது:பாலமேடு சாத்தையாறு அணையானது 1960 ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் கட்டப்பட்டது.இதன் கொள்ளவு 29 அடியாகும். இந்த கண்மாய் மூலம் கீழச்சின்னம்பட்டி, எரம்பட்டி, சுக்காம்பட்டி, கோவிலூர், அழகாபுரி, அய்யூர், முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், கட்டியகாரன் கண்மாய்கள் உள்ளிட்டவையும், 2500 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. மேலும், 250 ஏக்கர் நேரடியாக பாசன வசதி பெறுகிறது.கடந்த அறுபது ஆண்டுகளாக இந்தக் கண்மாயை தூர் வாரி ஆழப்படுத்ததால், 7 அடிக்கு சேறும் மண்ணும் உள்ளது.ஆகவே, தற்போது 22 அடி மட்டுமே தண்ணீர் தேக்க முடியும்.

இந்த அணையில் நீர் நிரம்பினால் பல கிராமங்களில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயரும்.கடந்த சில ஆண்டுகளாக, இப் பகுதிகளில் பருவ மழை பொய்த்ததால், பல கிராமங்களில் கிணறுகளில் தண்ணீர் மட்டும் குறைந்தும், நீர் ஊற்றுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.பாலமேடு சாத்தையாறு அணையை, தமிழக பாஜக விவசாயி அணி நிர்வாகி முத்துராமன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலர் கோவிந்தமூர்த்தி, முன்னாள் மாவட்டத் தலைவர் சீதாராமன், ஊராட்சித் தலைவர் ரமேஷன் செல்வராஜ், ஒன்றிய நிர்வாகி சுபாஷ் சந்திரபோஸ், தங்கதுரை, பூமா, ரவிசங்கர் ஆகியோர் பார்வையிட்டனர்.பிறகு இவர்கள் விரைவிலே, மத்திய மாநில வேளாண் அமைச்சர்களை சந்தித்து, அணையை தூர்வாருவதுடன், வாடிப்பட்டி, ஆண்டிபட்டி பெரியாறு பிரதானக் கால்வாயிலிருந்து பம்பு செய்து அணையில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!