கொரானாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை – மதுரை ஆட்சியரிடம் தமிழ் பேரரசு கட்சியினர் கோரிக்கை மனு

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் பேரரசு கட்சி மதுரை மாவட்ட தலைவர் காளீசுவரன், செயலாளர் பெனிக்ஸ், பொருளாளர் செல்ல பாண்டி, இளைஞரணி செயலாளர் ஷெரிப் மகளிரணி செயலாளர் அபிராமி ஆகியோர் கூட்டாக அளித்த மனு வில்.,இந்திய அளவில் கொரானா பாதிப்பில் தமிழகம் 2 வது இடத்தில் உள்ளது.இதுவரை 10 ஆயிரம் கோடி செலவு செய்து 3 ஆயிரம் பேரை கொரானாவுக்கு பலி கொடுத்து உள்ளோம். ஆனால் சித்த மருத்துவம் வாயிலாக நிறைய உயிர்கள் காப்பாற்றபட்டு உள்ளன.எனவே அரசு மருத்துவமனைகளில் உடனடியாக சித்த மருத்துவ பிரிவு தொடங்கபட வேண்டும். மாநிலத்தில் உள்ள 15 மண்டலங்களில் சித்த மருத்துவமனைகள் தொடங்க பட வேண்டும்.அரசு மருத்துவமனைகளில் அரசு நேரடியாக சித்த மருத்துவர்களை நியமனம் செய்ய து கூடுதல் படுக்கை வசதிகள் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் பேரரசு கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!