மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சுப்ரமணியபுரம் காவல் சட்டம் ஒழுங்கு .ஆய்வாளர் கலைவாணி… ரோந்து சென்று கொண்டு
இருந்தார் .அப்போது மதுரை பழங்காநத்தம் அம்மா உணவகம் அருகே உணவு வாங்க காத்திருந்த முதியவர்கள் மற்றும் முதியவர்கள் பலர் முக கவசம் இல்லாமல் இருந்ததை பார்த்த அவர் உடனடியாக வாகனத்திலிருந்து இறங்கி ஒலிபெருக்கி மூலமாக.. முக கவசம் இல்லாமல் யாரும் வெளியே வரக் கூடாது எனவும். மீறி வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் எனவும் தெரிவித்தார். உடனடியாக அவர் அங்குள்ள முதியோர்களுக்கும் அவர் வைத்திருந்த . முக கவசம் அனைத்தையும் இலவசமாக வழங்கினார். மேலும் அங்குள்ள முதியவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக வைரஸின் தீமை குறித்து விளக்கினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.