சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் முதுகு வலியால், அரசு ராஜாஜி
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் மரண வழக்கில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் என்பவருக்கு முதுகு தண்டுவடத்தில் வலி இருப்பதாக டாக்டரிடம் கூறியுள்ளார். ஆகையால் அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று டாக்டர் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் கோர்ட்டு உத்தரவின் பேரில் பாதுகாப்புடன் இன்று பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.