விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன். இவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களுக்கும் கடந்த மாதம் வைரஸ் தொற்று ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இவர்கள் குணமடைந்து வீடு
திரும்பினார்கள். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக எம்எல்ஏ தங்கப்பாண்டியன், காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டது. பரிசோதனையில் எம்எல்ஏ தங்கப்பாண்டியனுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மதுரை தனியார் மருத்துவமனையில் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியன் சிகிச்சை பெற்று வருகிறார். ராஜபாளையம் பகுதிகளில் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், எம்எல்ஏ வுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அந்தப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.