கம்யூ. கட்சி அலுவலக விமர்சனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்:

கம்யூனிஸ்ட் கட்சி அலுவைகத்தை வளைதலத்தில் அவதூறாக பதிவிட்டத்தைக் கண்டித்து, மதுரை அருகே சோழவந்தானில் புதன்கிழமை இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சோழவந்தான் மாரியம்மன் கோயில் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட நிர்வாகி ஜெயக்கொடி தலைமை வகித்தார். ஜோதிராமலிங்கம் முன்னிலை வகித்தார்.வாடிப்பட்டி ஒன்றியச் செயலர் தவமணி, நகரச் செயலர் சுந்தரம், மார்க்சீய கம்யூ. கட்சி ஒன்றியச் செயலர் வேல்பாண்டி, நிர்வாகிகள் கந்தவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!