மதுரை ஆத்திகுளம் கங்கை நகரை சேர்ந்தவர் கனகசுந்தர் ( 30). இவர் மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று இரவு கனகசுந்தர் வீட்டில் மின்சாரம் இல்லை. எனவே அவர் இதுதொட்ர்பாக மின்வாரியத்துக்கு தகவல் கொடுத்தார்.இதன்பேரில் 4 மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது கனகசுந்தரம்- மின்வாரிய ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது இதில் கனகசுந்தர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக கனகசுந்தரம் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் வேலை பார்க்கும் மதுரை வாகைகுளம் பாண்டியன் நகரைச் சேர்ந்த ரவிக்குமார் ( 29), முடக்கத்தான் மேட்டு தெருவைச் சேர்ந்த பாண்டி மகன் காசி ( 23), செல்லூர் மீனாட்சிபுரம் தரமணி மகன் ரஞ்சித் குமார் ( 24), மதுரை காஞ்சரம்பேட்டை சின்னப்பட்டியை சேர்ந்த ரமேஷ் ( 46) ஆகிய 4 பேரை கைது செய்து, அவர்களிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.