மின் கட்டணத்தை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கொரானா காலத்திலும் மின் கட்டணத்தை கொள்ளையடிக்கும் ஊழல் எடப்பாடி அரசை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி கோசங்களை எழுப்பி போரட்டத்தில் ஈடுபட்டனர்.இதே போன்று சிவகங்கை நகரில் கலைஞர் மாளிகை முன்பாக மாவட்ட துணை செயலாளர் மணிமுத்துதலைமையில் திமுகவினர் கறுப்பு கொடியேந்தி கண்டன கோசங்களை எழுப்பி போரட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கை நகர செயலாளர் துரை.ஆனந்த் தலைமையில்அவரின் வீட்டின் முனபாக கறுப்பு கொடியேந்தி போரட்டத்தில் ஈடுபட்டனர். இளையான்குடியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கப.ம மதியரசன் தலைமையிலும திருப்புவனத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சே ங்கை மாறன் தலைமையிலும் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் விட்டின் முன்பாக திமுகவினர் கறுப்பு கொடி ஏந்தி, கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!