மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள பிரபல தியேட்டர் கணேஷ். ஊரடங்கு காரணமாக சுமார் 120 நாட்களுக்கு மேலாக மூடப்பட்ட நிலையில் இன்று சுத்தப் படுத்துவதற்காக தியேட்டரை
திறந்து பார்த்தபோது சுமார் 30க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளே இருப்பதை கண்டு தியேட்டர் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கதவை . அடைத்து மேலூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார் சம்பவ இடத்திற்கு விரைந்த மேலூர் வன அலுவலர் . கம்ப குடியான் தலைமையிலான வன அலுவலர்கள் திரையரங்குகள் கூண்டுகளை வைத்து வைத்து சுமார் 35 குரங்குகளை பிடித்தனர் வனத்துறையினர் அனைத்தும் பத்திரமாக அடர்ந்த வனப் பகுதியான சத்திரப்பட்டி வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது மதுரை மாவட்டம் மேலூர் மையப்பகுதியில் உள்ள தியேட்டருக்கும் இவ்வளவு பெரிய குரங்கு கூட்டங்கள் இருந்தது தெரிய பொதுமக்களிடையே.. ஆச்சரியத்தை ஏற்படுத்தியது


You must be logged in to post a comment.