மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.அதன் ஒருபகுதியாக பழங்காநத்தம் பகுதியில் இருந்து திருப்பரங்குன்றம் வரையிலான 2.5 கிலோ மீட்டர் புதிய பாலம் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் இன்று தொடங்கியது.இதற்காக திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையோரத்தில் 14 இடங்களிலும், பசுமலையிலிருந்து பழங்காநத்தம் பகுதி வரை 16 இடங்களிலும் மணல் பரிசோதனைக்காக நெடுஞ்சாலை துறை மூலமாக குழிகள் தோண்டி மணல் சேகரிக்கும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் பாலமானது திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையோரம் வருவதால் ஒவ்வொரு 100 மீட்டர் இடைவெளியிலும் 14 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு மணல் எடுக்கப்பட்டு, மண்ணின் நிலைத் தன்மை குறித்து பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மணல் பரிசோதனை முடிந்து கட்டுமானத்திற்கு தகுந்த இடம் என சான்று அளிக்கப்பட்ட உடன் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.