சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கினார்.கொரோனா தொற்று பரவலால் முன்று மாதங்களாக பள்ளிகள் திறக்காத நிலையில், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு உணவுப் பொருள்களை நேரடியாக வினியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு, அரிசி, மூன்று கிலோ, 200 கிராம்; பருப்பு, ஒரு கிலோ, 200 கிராம். உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரிசி, நான்கு கிலோ, 600 கிராம்; பருப்பு ஒரு கிலோ, 250 கிராம் நேரடியாக சத்துணவு மையங்களில் வினியோகிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு உலர் பொருள்களை தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ தாயுமானவர் வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ ,சொக்கலிங்கம்,தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் முத்துசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ,கருப்பையா ,சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி ஆகியோர் செய்து இருந்தனர். அடையாள அட்டையை காண்பித்து மாணவர்கள் பொருள்களை பெற்றுச் சென்றனர். மாணவர்கள் வரமுடியாத பட்சத்தில் அவர்களது பெற்றோர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை காண்பித்து சமூக இடைவெளியில் நின்று வாங்கிச் சென்றனர்.சரியான நேரத்தில் இந்த பொருள்கள் தங்களுக்கு உதவியாக இருந்ததாக மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!