மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வந்த நிலையில் மதுரை மாநகராட்சி, திருப்பரங்குன்றம் தாலுகா , பரவை மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ஜூன் 24ம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது.இதனால் மதுரை மாநகரத்தில் செயல்பட்டு வந்த முக்கிய காய்கறி மார்க்கெட் ஆன பரவை மார்க்கெட் ஜூன் 24 ஆம் தேதியில் இருந்து மூடப்பட்டது.ஜூலை 15ம் தேதி முதல் மதுரை மாநகரத்தில் சிலதளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருந்த போதிலும் பரவை காய்கறி மார்க்கெட் திறக்கப்படவில்லை.
பரவை காய்கறி மார்க்கெட் நம்பி 1000 நபர்களின் வாழ்வாதாரம் இருந்து வருவதால் பரவை மார்கெட் சங்கத்தினர் மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் காய்கறி மார்க்கட்டினை திறப்பதற்கான கோரிக்கையை வைத்தனர். அதன் அடிப்படையில் பரவை மார்க்கெட் தற்காலிகமாக மாற்றி அமைப்பதற்காக வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் 2 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது.இதற்கிடையில் 2 தினங்களுக்கு முன்பு திருமங்கலம் உச்சபட்டி துணைக்கோள் நகரம் தேர்வு செய்யப்பட்டு பரவை மார்க்கெட் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
பரவை மார்க்கெட் மாற்று இடத்தில் அமைவதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் உச்சப்பட்டி துணைக்கோள் நகரங்களில் இன்று மாலை தற்காலிக காய்கறி மார்க்கெட்டினை மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் முன்னிலையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்.தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் 300க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் அமைந்துள்ளது.மேலும் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக தற்காலிக காய்கறி மார்க்கெட்டின் உள்ளே வரும் அனைவருக்கும் தர்மல் முறைப்படி பரிசோதனைகள், கை கழுவுவதற்கான சனிடைசர் வசதி, சத்து மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.