மதுரை பழங்காநத்தம் பகுதியில் பட்டப்பகலில் மா்ம நபர்கள் வீடு புகுந்து முகத்தில் மிளகாய் பொடி தூவி வெட்டி கொலை.

மதுரை பழங்காநத்தம் நேரு நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர்கள் தங்கம் அவரது மனைவி பஞ்சவர்ணம்  62. மதியம் ஒரு மணிக்கு தனது கணவர் வைத்திருந்த டீக்கடையில் சந்தித்து விட்டு திரும்பும் இல்லத்திற்கு வந்து விட்டார்.  கணவர் மதியம்  சாப்பிடுவதற்காக இல்லத்திற்கு வந்து பார்த்த பொழுது தலையில் வெட்டுக் காயங்களுடன் பஞ்சவர்ணம் இரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் .அவர் கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பந்தப்பட்ட எஸ் எஸ் காவல் நிலையம் ஆய்வாளர் பிளவர் சீலா மற்றும் மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் பழனிக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்ததில் கொலை செய்யப்பட்ட இடத்தில் வலது புறம் நோக்கிகடைசிவரை சென்றது.   விசாரனையில் மர்ம நபர்கள் வீடு புகுந்து முகத்தில் மிளாக பொடி தூவி பின் தலையில் வெட்டி 5 பவுன் தங்க நகை மற்றும் ₹50000பணம் கொள்ளை அடித்து தப்பி சென்று விட்டதாக விசாரணையில் கூறப்படுகிறது. மேலும் காவல்துறையினர் சுற்றியுள்ள பகுதியில் சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள். பட்டப் பகலிலே இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!