காற்றில் பறந்த சமூக இடைவெளி கண்டுகொள்ளாத அரசுடமையாக்கப்பட்ட வங்கி நிர்வாகம்

மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் கடந்த 16 நாட்களாக பொது ஊடகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.இந்த நிலையில் நேற்றைய தினம் முதல் தளர்வுகளோடு மதுரை மாவட்டம் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில்,தளர்வுகளையும் கரானா வைரஸ் வழிமுறைகளையும் பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் மதுரை ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் முண்டியடித்துக்கொண்டு வங்கி பரிவர்த்தனைகளுக்காக பொதுமக்கள் காத்திருந்ததால்.அந்த பகுதியில் தனிமனித சமூக இடைவெளி காற்றில் பறந்த அவலமும் அரங்கேறியது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் முக கவசம் அணியாமல் முண்டியடித்துக்கொண்டு வங்கி பரிவர்த்தனைகள் நின்று கொண்டிருந்தபோது வங்கி நிர்வாகம் இதை கண்டுகொள்ளாமல் இருந்தது சமூக ஆர்வலர்களிடையே வேதனையை உண்டாக்கியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் முறையாக இதை கவனத்தில் கொண்டு மதுரை மாநகர் பகுதிகளில் உள்ள வங்கி நிர்வாகத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு விதிகளை முறையாக பின்பற்றவும் பொதுமக்களை பின்பற்ற சொல்லவும் அறிவுறுத்த வேண்டும். என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!