திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை மாசுபடுவதை தடுக்க புதிய குளியலறை, சலவை கூடம் கட்டுவதற்காக பணிகள் மூன்று மாதங்களுக்குப் பின்பு மீண்டும் தொடக்கம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் கோவில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான சரவணப்பொய்கையில் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் தினமும் துணி துவைப்பது குளிப்பது போன்றவற்றினால் பெருமளவில் மாசடைந்து துர்நாற்றம் வீசியது.இதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி சார்பில் புதிய சலவை கூடம், குளியலறை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது. இந்தப் புதிய சலவை கூடம் மற்றும் குளியலறை சரவணபொய்கை முடி காணிக்கை செலுத்தும் கட்டிடத்தின் அருகே கட்ட திட்டமிடப்பட்டது.

இதற்காக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் தனது MP நிதியிலிருந்து ரூ 45 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதற்கான பூமி பூஜை மார்ச் 9-ம் தேதி நடைபெற்றது.பின் சலவை கூடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கிய ஒரு சில நாட்களில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது.தற்போது இந்த பணியானது இன்று முதல் குறைந்த நபர்களை வைத்து மீண்டும் தொடங்கியுள்ளது. இங்க 20 நபர்கள் சலவை செய்வதற்கான தொட்டி, 8 கழிப்பறை 9 குளியலறை கட்டப்பட உள்ளது.மேலும் ஆறு மாதத்திற்குள் சலவை கூடம், குளியலறை மற்றும் கழிப்பறை கட்டுவதற்கான பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!