நான்கு வழிச்சாலையில் உத்திரபிரதேச மாநிலம் நோக்கி தனி ஒருவனாக நடந்து சென்ற வடமாநில கூலி தொழிலாளி- சாலையில் பசியால் மயங்கி கிடந்தவரை மீட்டு காவலர்கள் உதவி

மதுரை மாவட்டம் மேலூர் நான்கு வழிச்சாலையில் வடமாநில கூலி தொழிலாளி ஒருவர் பசியால் மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த சிலர் மேலூர் டி.எஸ்.பி சுபாஷிற்கு தகவல் அளித்ததின் பேரில் மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது சாலையோரம் பசியால் மயங்கி கிடந்தவர் ஃங்குமிஸ்ரா என்பதும் 20 வயதான இவர் மதுரை திருமங்கலத்தில் பானிபூரி கடையில் வேலை பார்த்து வந்ததாகவும், ஊரடங்கு உத்தரவால் சரியான வருமானம் இன்றியும், கடை நடத்த னுமதி இல்லாததாலும்,தான் பணிபுரிந்த 46 நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படாத காரணத்தால் வேறு வழியின்றி சொந்த மாநிலமான உத்திரபிரதேசத்திற்கு செல்ல முடிவெடுத்து தனி ஒருவனாக திருமங்கலத்திலிருந்து புறப்பட்டு நடந்தே சென்றுள்ளார். இந்நிலையில் மேலூர் நான்கு வழிச்சாலை வழியாக நடந்து வந்த போது பசி மயக்கத்தால் நடக்க முடியாமல் சாலை ஓரமாக படுத்துள்ளார். பின்னர் இளைஞர் ஃங்குமிஸ்ராவுக்கு உணவு மற்றும் தண்ணீர் வாங்கி கொடுத்து மனிதநேயத்துடன் மேலூர் காவல்துறையினர் அவருக்கு உதவி செய்தனர். இதனையடுத்து அவரை சொந்த மாநிலமான உத்திரபிரதேசத்துக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து அவரை ஒப்படைக்க அழைத்து சென்றனர். மனிதநேயத்துடன் போலீசார் வடமாநில இளைஞரை மீட்டு அவரை சொந்த மாநிலம் செல்ல உதவிய காவல்துறையினரின் செயல் அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!