கள்ளிப்பால் கொடுத்து குழந்தையை கொலை செய்த வழக்கின் முதல் குற்றவாளிக்கு நிபந்தனை ஜாமீன்

மதுரை மாவட்டம், சோழவந்தான், பூமேட்டுத் தெருவை சேர்ந்த தவமணி – சித்ரா இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மே 10ல் நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறந்து 4 நாட்களே ஆன நிலையில், அந்த குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்துள்ளனர்.சோழவந்தான் போலீசார், கொலையான குழந்தையின் பாட்டி பாண்டியம்மாள், தந்தை தவமணி உள்ளிட்டோரை கைது செய்தனர். இதில் பாட்டி பாண்டியம்மாள் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. இவ்வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி பாண்டியம்மாள், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுவை நீதிபதி நசீமா பானு விசாரித்தார். வழக்கறிஞர் கிருஷ்ணவேணி பாட்டி தற்போது வயது முதிர்வு காரணமாக சிறையில் சிரமப்படுகிறார் எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார் இதனை தொடர்ந்து நீதிபதி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினார். வழக்கில் மறு உத்தரவு வரும் வரை சோழவந்தான் போலீசில் தினசரி காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளார். வழங்கி நீதிமன்றம் உத்தரவு.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!