ஊரடங்கை மீறியதாக வழக்குப்பதிவு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் இதுவரை 144 தடை உத்தரவை மீறி அலட்சியமாக வெளியே சுற்றித் திரிந்த 36,172 நபர்கள் மீது 28,106 வழக்குகள் பதிவு செய்யபட்டு, அவர்களிடமிருந்து 10,161 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும், மதுவிலக்கு சம்பந்தமாக குற்றங்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!