குப்பை மேடாக மாறி வரும் மாநகராட்சி பூங்காக்கள்

மதுரையில் பூங்காக்கள் தொடர்ந்து அடைக்கப்பட்டு, பராமரிப்பின்றி இருப்பதால், குப்பை மேடாக மாறி வருகிறது.மதுரையில் பல இடங்களில் மாநகராட்சி சார்பில் பூங்காக்கள் தொடர்ந்து பராமரிக்கப்படுகின்றன. இந்த பூங்காக்களில், கொரோனா தடை காலத்துக்கு முன்பு அப்பகுதி மக்கள் குடும்பத்துடன் இளைபாறுவதுடன், சிறு குழந்தைகளுக்கு விளையாடவும், முதியவர்கள் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை அண்ணாநகரில் வைகை காலனி மற்றும் சுகுனா ஸ்டோர் அருகேயும், கே.கே.நகர், மாநகராட்சி அருகே எக்கோ பார்க், காந்தி மியூசியம் அருகேயும், திருப்பரங்குன்றம், ஆர்.வி. பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மதுரை மாநகராட்சி சார்பில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.கொரோனவால் மூடப்பட்டு பல மாதங்கள் ஆனதால், மதுரை அண்ணாநகர் பூங்காவில், மரங்கள் சாய்ந்தும், குப்பைகள் மலைபோல குவிந்து பொழிவின்றி காணப்படுகிறது.

இதை, மதுரை மாநகராட்சி சம்பந்தப்பட்ட துறையினர், பூங்காவை கொரோனா காலம் முடியும் வரை ஆட்களை அனுப்பி உரியமுறையில் பராமரிக்க இப் பகுதி சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!