மதுரையில் வெள்ளாளர் இனத்தை இழிவாக பேசி பெண்ணை தாக்கிய திமுக சட்ட மன்ற உறுப்பினர் மூர்த்தியை கண்டித்து அவரது உருவ பொம்மை எரிக்க முயன்றதால் பரபரப்பு

அகில உலக வெள்ளாளர் பேரவை சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி அவர்களின் உருவபொம்மையை 25க்கும் மேற்பட்டோர் எரிக்க முயன்றனர் அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது இதனை தொடர்ந்து திமுக சட்ட மன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்க கோரி கண்டண கோசங்களை எழுப்பினர் பின்னர் செய்தியாளர்களிடம் அகில இந்திய வெள்ளாளர் பேரவை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் எங்கள் சமூகத்தை சேர்ந்த பெண் குடும்பத்துடன் வசித்து வருகிறார் இவர்களை திமுக கிழக்கு சட்டமன்ற உறுப்பின்ர் மூர்த்தி அவரது தொகுதியில் அடிப்படை வசதி செய்து தரவில்லை என்று முகநூலில் விமர்சனம் செய்துள்ளார் இந்நிலையில் கடந்த வாரம் ஊமச்சிகுளம் பகுதியில் வசித்து வந்த எங்கள் சமுகத்தினரை கிழக்கு சட்ட மன்ற உறுப்பினர் மூர்த்தி தனதுஅடி ஆட்கள் உடன் குடியிருக்கும் விட்டுக்குள் புகுந்து காலில் இருந்த காலணியை கலட்டி அடித்ததும் ஜாதி கலவரத்தை தூண்டும் விதமாக சமுகத்தை பற்றி இழிவாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதனால் எங்கள் சமுகத்தை இழியவாக பேசியதால் நாங்கள் மிகவும் மன ஊலைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் ஆகையால் இவர் _ மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் எங்கள் சமுகத்தை சேர்ந்த கணவன் மனைவிக்கு பாதுகாப்பு தர வேண்டும் கூறினார்.இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!