சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் யோகா தின விழா நடைபெறுவது வழக்கம். கொரோனாவால்பள்ளி மாணவர்கள்
வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு மாணவர்கள் வீட்டிலேயே யோகா செய்யும் முறையை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,முத்தமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் ஊக்குவித்தனர். மாணவர்கள் தொடர்ந்து வீட்டில் யோகாசன பயிற்சி செய்வது அவர்களது உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு உதவுவது . ஆகையால் இந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவதில் சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்களுக்கு முன்பே பயிற்சி பெற்று இருந்ததால் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் இந்த காலகட்டத்தில் மாணவர்கள் யோகாசனங்களை வீட்டிலேயே செய்து தங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யுத்தியாக இதனை கையாண்டு வருகின்றனர். யோகா என்பது உடற்பயிற்சியை பற்றியது மட்டுமல்ல, மனம், சிந்தனை, செயல் என்று அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒருநிலைப் படுத்துவது என்பதை மாணவர்கள் உணர்ந்துகொள்ள புதுமை யோகாசன நிகழ்வு வழிவகுத்தது. கொரோனா நேரத்தில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி மேலும் உடல் ஆரோக்கியத்தை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இப்பள்ளி மாணவர்கள் யோகாவை தின்தோறும் வீடுகளில் செய்து உடல் ஆரோக்கியத்தை பேணி வருவது பாராட்டுக்குரியது. இப்பள்ளியில் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாட வகுப்புகளும், சதுரங்க பயிற்சிகளும் நடைபெற்று வருவது ஊரடங்கு காலத்தில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









