கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம். காவல் ஆணையாளர் பாராட்டு

கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் காவல் ஆணையாளர் பாராட்டு . மதுரை மாநகரில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணியாமல் நடமாடும் பொதுமக்களுக்கு கரடி பொம்மைக்கு முக கவசம் அணிவித்து அதன்மூலம் தொடர்ந்து மதுரை மாநகர் செனாய் நகரில் மினரல் வாட்டர் கேன் வியாபாரம் செய்துவரும் சமூக ஆர்வலர்  அசோக்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

** உழவர் சந்தை, ரேஷன் கடைகள், அம்மா உணவகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் எனவும் முக கவசம் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்…

**கபசுர குடிநீரை அனைவருக்கும் தினந்தோறும் வழங்கி வருகிறார்.

**கடைகளில் வரிசையில் நிற்கமுடியாத முதியவர்கள், நோயாளிகளுக்காக பலசரக்கு, மாத்திரைகள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்கித்தருகிறார்.

**இதழ் தானம் என்ற பெயரில் பிறரிடம் இருந்து புத்தகங்களை பெற்று பள்ளி, கல்லுாரி, நுாலகங்களுக்கு வழங்கி வருகிறார்.

அசோக்குமாரின் நற்செயலை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!