தந்தை-மகன் உயிாிழப்பைக் கண்டித்து மதுரையில் உணவகங்கள் ஒருநாள் கடையடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் சேர்ந்த 2 வியாபாரிகள் தந்தை மற்றும் மகன் மர்ம மரணத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து ஹோட்டல் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பாக இன்று அடையாள வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு செய்யப்பட்டு அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சைவ அசைவ உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூரிலிருந்து தங்கி வேலை பாா்ப்பவா்கள் உணவு கிடைக்காமல் சிரமத்துக்கு ஆளாகி உள்ளார்கள் எனினும் வியாபாரிகளின் மரணத்திற்கு எங்களின் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் ஆனது நடத்தப்படுகிறது என ஹோட்டல் உரிமையாளர் நலசங்கம் உறுப்பினர்கள் தகவல் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!