மதுரை மாவட்டம் பரவையில் உள்ளது பாங்க் காலனி. இப்பகுதியில் ஏ காலனி பி காலனி என இரு பகுதிகள் உள்ளன. இதில் பி. காலனியில் உள்புறத்தில் ஒரு விரிவாக்கப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர், இடம் வாங்கி, அதில் பலர் வீடு கட்டியுள்ளனர். இந்த விரிவாக்கப் பகுதிக்கு பரவை பேரூராட்சி சார்பில், இன்னும் சாலை வசதிகள் செய்து தரப்படவில்லை. இப்பகுதியில் வளர்ச்சி கட்டணம், குழாய் வரி, வீட்டு வரி போன்றவற்றை செலுத்தி வருகின்றனர்.இது குறித்து பரவை பேருராட்சியினரிடம் கேட்டபோது, ரோடு போடுவதற்கு பின் காலனியில் உள்ள ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.இந்த நிலையில் இன்று பேரூராட்சி சார்பில் பேங்க் காலனியில் ரோடு போடுவதற்காக ரோடு ரோலர் இயந்திரங்களுடன் வந்தனர்.அப்போது தங்கள் பகுதிக்கும் சேர்த்து ரோடு போடுவதாக இருந்தால் மட்டுமே ரோடு போட வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தினர்.இதனையடுத்து சாலை போட வந்தவர்கள், பணியை நிறுத்தி விட்டு வேறு பகுதிக்கு சென்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.