பெட்ரோல் டீசல் விலை மற்றும் கலால் வரியை உயர்த்தி மக்களை துன்புறுத்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து சமூக இடைவெளியுடன்.. எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் மதுரை க்ரைம் ப்ராஞ்ச் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.எஸ்.டி.டி.யூ மதுரை மாவட்டசெயலாளர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார் .எஸ்.டி.டி.யூ மாவட்ட தலைவர் பட்டறையூசுப், எஸ்.டி.டி.யூ மாநில செயலாளர் அப்துல் சிக்கந்தர் – ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எஸ்.டி.டி.யூ மாவட்ட செயலாளர் ஷேக் இப்ராஹிம், வரவேற்புரை நிகழ்த்தினார்.எஸ்.டி.டி.யூ மாவட்ட பொருளாளர் மூர்த்தி நன்றியுரை நிகழ்த்தினார்.. இதே போன்று மதுரையில் 4, இடங்களில் மாட்டுத்தாவனி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் முன்பாகவும் மகபூப்பாளையம் பகுதியிலும் பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்து கழகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.