பாரதிய ஜனதா கட்சி பிரமுகரை மதுரை திமுக எம்எல்ஏ தாக்க முயலும் அதிர்ச்சி வீடியோவால் பரபரப்பு….

மதுரை புறநகர் இளைஞர் அணி கோட்ட பொறுப்பாளரும் ஹோமியோபதி மருத்துவருமான சங்கரபாண்டி ஊமச்சிக்குளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று சங்கரபாண்டி வீட்டிற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற மதுரை கிழக்கு சட்டமன்ற திமுக எம்எல்ஏ மூர்த்தி தன்னைப்பற்றி சமூக வலைத்தளங்களில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் உண்மைக்கு புறம்பான தகவல்களையும் தான் ஊழல் செய்துள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல்களையும் சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் எம்எல்ஏ மூர்த்தி சங்கரபாண்டியையும் அவரது மனைவியும் தாக்க முயல்வது ஒரு கட்டத்தில் தனது காலணியை கழற்றி தாக்க முயலும் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த காட்சிகள் சங்கரபாண்டி வீட்டில் இருந்த CCTV கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய நிலையில் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் சங்கரபாண்டி தொடர்புகொண்டு கேட்டபோது தான் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் செய்த ஊழலை நேர்மையான முறையில் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட தாகவும் அதற்காக தன்னை தாக்க முயற்சித்ததுடன் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இதுகுறித்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவிதுள்ளார்.

இது குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தியை தொடர்பு கொண்டு கேட்டபோது தன்னைப்பற்றி அவதூறான தகவல்களை பரப்பி வருவதாகவும் ஏன் அவ்வாறு செய்கிறீர்கள் என கேட்டதாகவும் தான் யாரையும் தாக்க முயற்சிக்கவோ தகாத வார்த்தைகள் பேசவோ இல்லை எனவும் CCTV காட்சிகள் அனைத்தும் எடிட் செய்யப்பட்டு ள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!